Kollywood News

  • Home/
  • Cine News/
  • கட்டிப்பிடித்து தனுஷைப் பாராட்டிய ரஜினி

கட்டிப்பிடித்து தனுஷைப் பாராட்டிய ரஜினி



ரஜினி ஒரு வார்த்தை சொன்னா போதும், அதை வச்சு ஒரு வாரத்துக்கு படத்தை ஓட்டிடுவோம் என்பதுதான் பலருக்கும் எண்ணமாக இருக்கிறது. ஊருக்கே அந்த எண்ணம் இருக்கும்போது, மருமகன் தனுஷுக்கு மட்டும் இருக்காதா என்ன? தன்னுடைய இயக்கத்தில் இன்னும் சில நாட்களில் ரிலீஸாகப் போகிற ‘பவர் பாண்டி’ படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டியிருக்கார் தனுஷ். 

படத்தைப் பார்த்த ரஜினி, தனுஷை கட்டிப்பிடித்துக் கொண்டு சில நொடிகளுக்கு எதுவுமே பேசாமல் இருந்திருக்கிறார். “இந்த ஒரு படம் போதும். சிறந்த இயக்குநர்னு பல வருஷங்களுக்கு உங்களை மக்கள் கொண்டாடுவாங்க. பிரமாதம்…”னு ரஜினி பாராட்ட, நம்ப முடியாத திகைப்பில் இருந்தாராம் தனுஷ்.

share