Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஏப்ரல் 14-ல் திரைக்கு வருகிறார் ‘காலா’!

ஏப்ரல் 14-ல் திரைக்கு வருகிறார் ‘காலா’!



ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக படத்தின் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி வேலைகள் முடியவில்லை.

ஏப்ரல் 14ல் திரைக்கு வருக் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஸ் ப்ரொடக்‌ஷன் பணிகளின் இழுபறி நிலையால் மீண்டும் படம் தள்ளிச் செல்கிறது.

இதற்கிடையில் தனுஷின் ‘வொண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

காலா பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளன. இதனால் படத்தை ஏப்ரல் மாதத்தில் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று படக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. 

Read More about :

share