ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் நாட்டிற்கு பேரழிவு - பிரகாஷ்ராஜ்!ரஜினி அண்மையில் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடிகர் கமல் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 

அரசியல் கட்சி குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறுகையில், "நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். 

நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன்" என்றும், "நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்

share