ரஜினி, கமலுக்கு வேண்டுகோள் வைத்த பிரேமம் இயக்குனர்!


சினிமா டிக்கெட் விலை உயர்வை கண்டித்து பல நடிகர், நடிகைகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்  பேசும் போது, ‘சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றி அவருடன் பேச வேண்டும். நீங்கள் அவருடன் பேசினால் நிச்சயம் உங்கள் பேச்சுவார்த்தை திரை உலகத்தையும் ரசிகர்களையும் நிச்சயம் காப்பாற்றும்”என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

share