Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினி மக்கள் மன்ற சின்னத்தில் மீண்டும் ஒரு மாற்றம்!

ரஜினி மக்கள் மன்ற சின்னத்தில் மீண்டும் ஒரு மாற்றம்!



நடிகர் ரஜினிகாந்த மக்கள் மன்றத்தில் உள்ள சின்னத்தில் இடம்பெற்றிருந்த பாம்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, டிசம்பர் 31 ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவிப்பு வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பலர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்த மேடைக்கு பின்னால் இடம்பெற்றிருந்த சின்னத்தில் பாபா முத்திரை மற்றும் தாமரைப் பூ இருந்தது. இதனால் ரஜினியை பாஜகதான் இயக்குவதாக பலர் விமர்சித்தனர். 

இதனால் தாமரை சின்னத்தை நீக்கிவிட்டு பாபா முத்திரையை மட்டும் வெளியிட்டார். இதனையடுத்து தற்போது, பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.அதனால் அந்த பாம்பு படம் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

share