Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிக்கு, எஸ்.ஜே.சூர்யா வில்லனா?

ரஜினிக்கு, எஸ்.ஜே.சூர்யா வில்லனா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகருக்கும் 'தலைவர் 167' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே நாளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்ததால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் வதந்தி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

share