Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆன்மிக வார்த்தை குறித்து ரஜினி அளித்த விளக்கம்!

ஆன்மிக வார்த்தை குறித்து ரஜினி அளித்த விளக்கம்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31 ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்தார். அப்போது ஆன்மிக அரசியலை அறிமுகம் செய்வதாகவும் அவர் அறிவித்தார். 

இதனால் ஒரு சில அரசியல் பிரமுகர்கள் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை மதவாத அரசியல் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தனர்.

இதற்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார், ஆன்மீக அரசியல் என்பது மதவாத அரசியல் இல்லை. உண்மையான, நேர்மையான, நாணயமான, மதசார்ப்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல். ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என கூறியுள்ளார்.


மேலும் பெரும்பாலான புரட்சிகள் தமிழகத்தில் இருந்து தான் தொடங்குகின்றன எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

share