ரஜினி ரசிகர்களுக்கு பொன்னான ஒரு நாள் அது இந்நாள்!


ரசிகனின் கனக்குரல்...

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் குணமாக அவரது ரசிகர்கள் பலர் பல யாகங்களையும், பூஜைகளையும் செய்து வந்தனர். அந்த ஒளிவிளக்கை அணையாமல் மீண்டும் மக்களிடமே சேர்த்து விட்டார் அந்த ஆண்டவன். மீண்டும் அந்த விளக்கு தமிழகத்தில் கால் பதித்த நாள் இன்று..
 
ஒரு சில ரசிகர்களின் மகிழ்ச்சி பொங்கல்.. இதோ

”இன்று எமனை வென்ற நாள்!
சாவை சாவடித்த நாள்!
பல கோடி ரசிகர்களின் கண்ணீரை துடதை்த நாள்!
நேற்று எமனிடம் போர் தொடுத்து வென்றார்!
இன்று போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டு இருக்கிறார்..!!
நாளை களம் கண்டு போரில் வென்று அரியணை ஏறுவார்.... ”

”கணக்கை முடிக்கலாம் வந்த காலன் 
இவரிடம் கை நீட்டி ஆட்டோகிராப் 
வாங்கி சென்றார்

நல்லவங்களை 
ஆண்டவன் சோதிப்பார்
ஆனால் கைவிடமாட்டார்
என்ற வசனம் ஜூலை 13 அன்று உயிர்பெற்றது 

தலைவா நீங்க 
எப்பவுமே மன நிம்மதியோடு
ஆரோக்கியமா இருக்கனும் 
அது ஒன்றே போதும்  

நாங்கள் மகிழ்ச்சி. ..”

2011 ஆம் ஆண்டில் ரசிகர்கள் ரஜினி நலம் பெற வேண்டி செய்த சில பூஜைகள் படங்களின் தொகுப்பு கீழே...

share