”அரசியலுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டால்.....” - ரஜினி!நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர திருமணமண்டபத்தில் நடைப்பெற்றுவருகிறது உடன் இயக்குனர் Sp முத்துராமன் உள்ளார்.

முதலி பேசிய எஸ் பி முத்துராமன், ‘நடிகராக மட்டும் அல்ல நல்ல நண்பாராக உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
                        
முதல் சந்திப்பில் அவரை எப்படி பார்த்தேனோ தற்போதும் அப்படியே உள்ளார் ரஜினிகாந்த்.
               
புகழை தலையில் ஏற்றிக்கொள்ளதாவர் கொடுத்து பழக்கப்பட்டவர் .                       

 ரஜினி புகைப்படம் வீட்டில் வைக்கும்போது அவரை போலவே ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைத்து வைக்க வேண்டும்.” என இயக்குனர் எஸ் பி முத்துராமன் கூறினார்.

அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த், ‘நான் முதலில் எனக்கு முதல் முதலில் வாழ்க்கை கொடுத்த இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்கு பலவகையில் வழிகாட்டியாக இருந்தவர் அவர்.
                  
குழுவாக புகைப்படம் எடுக்க நினைத்தால் அது சரிவராததால் இப்போது இந்நிகழ்வு நடக்கிறது.                
        
ஏதாவது திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி எதுவது ஸ்டன்ட் பன்னாவாருனு சொல்லாறங்க ரசிகர்கள் துணையாலும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துணையாலும் அப்படி நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை 

 சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது அந்த கூட்டணி வெற்றி பெற்றது.. சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் அந்த நிலையை ரசிகர்களுக்கு சொல்லும் நிலையில் உள்ளதால் தேர்தல் நேரத்தில் நான் ஆதரவு இல்லை என சொல்ல நேர்கிறது. ரசிகர்களை தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன் 

அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன்.” என கூறினார்.

share