’ரஜினி’ ரசிகர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்!ரஜினி அவரது ரசிகர்களை வரும் 15 ஆம் தேதி நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

முதல் கட்டமாக இந்த புகைப்பட நிகழ்வு வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. நாள் ஒன்றிற்கு 1000 ரசிகர்கள் வீதம் ஐந்து நாட்களுக்கும் 5000 ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருக்கிறார் ரஜினி. 

இந்நிகழ்வு ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. ரசிகர்களின் விருப்பப்படி ரஜினியுடன் தனியாகவும் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நண்பர்கள், நிர்வாகிகளுடன் இணைந்தும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 

வெளியூரில் இருந்து வரும் ரசிகர்கள் காலை 7 மணி முதல் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு அங்கு சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், மதியம் மாலை என அனைத்து வேலைகளுக்கும் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு அங்கு வரும் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் நேரடியாக புகைப்படம் எடுக்க மட்டுமே செய்கிறார். 

பரிசு பொருட்கள் வழங்குவது, சால்வை அணிவிப்பது, மாலை அணிவிப்பது என்ற எந்த மரியாதையும் வேண்டாம் எனவும் அங்கு வரும் அனைத்து ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலில் விழவே கூடாது என ரஜினி கண்டிப்பான 
ஒரு கட்டளையிட்டிருக்கிறாராம்.

வரும் ரசிகர்கள் அனைவருக்கும் தனித்தனி ஐடி கார்டு கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கார்டிலும் பார் கோர்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த பார் கோர்ட் ஸ்கேன் செய்த பிறகு, விழா அமைப்பாளர்கள் வைத்திருக்கும் பட்டியலில் இருக்கும் பார் கோர்டுடன் ஒத்துப் போனால் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களாம். 

தலைவரின் தரிசனம் கிடைக்கும் அந்நாளுக்காக காத்திருக்கிறோம் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள். 

share