Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமிதாப்பச்சன் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி

அமிதாப்பச்சன் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி

இந்திய திரை உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் விரைவில் தமிழில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் , இந்தப்படத்தை ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.

திருச்செந்தூர் முருகன் புரடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது, மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு சிவாஜி கணேசன் நடித்த  ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயர் தலைப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தப்படம் தயாராகவுள்ளது.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸை அமிதாப்பின் நெருங்கிய நண்பரான ரஜினியை வைத்து ரிலீஸ் செய்ய முடிவெடுத்து அவரிடம் தேதி கேட்டு படக்குழுவினர் சந்தித்தனர், பின் ரஜினி சம்மதம் தெரிவித்து தேதியும் கொடுத்தார் .

‘உயர்ந்த மனிதன்’படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரஜினி ரிலீஸ் செய்தார்.“என்னுடைய நண்பர் அமிதாப் தமிழ்ப்படத்தில் நடிப்பது தமிழ் திரைப்பட உலகத்திற்கே பெருமை, அதே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா இந்தி உலகத்திற்கு அறிமுகம் ஆவதில் மிக்க மகிழ்ச்சி. அவர் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்” என ரஜினி வாழ்த்தினர்.

பின்பு எஸ்.ஜே.சூர்யா, ரஜினி ‘உயர்ந்த மனிதன்’ பட பர்ஸ்ட் லுக்கை  ரிலீஸ் செய்யும் வீடியோவை பெருமையுடன்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

share