நதிகள் இணைப்பு குறித்து ரஜினி!


'நதிகளை இணைப்போம் பாரதம் காப்போம்' இயக்கம் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்ச்சி கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நதிகள் இணைப்பை வலியுறுத்தி பேசியவாறு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்,

"ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்கவேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதிகளாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த மாபெரும் முயற்சி வெற்றிப்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்பதாகும்.

share