Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி

ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 3ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் 4D டால்பி ஆடியோ சிஸ்டத்தில் வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த டிரைலர் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஆடியோ, வீடியோ அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் இரண்டு டீசர்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

share