ரஜினிக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வருகிற 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக, ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில், மும்பையின் தாராவி பகுதியைப் போல் செட் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ரஜினியின் ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் பேசியிருந்தனர்.

 ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகிக்கொள்ள, தற்போது பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரையும் வைத்து கடந்த 14ஆம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் போட்டோஷூட் செய்யப்பட்டது. புதுடெல்லியைச் சேர்ந்த இவர், பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அத்துடன், மம்மூட்டிக்கு ஜோடியாக ‘ஒயிட்’ என்ற மலையாளப் படத்திலும், சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் ஹுமா குரேஷி.

share