Kollywood News

  • Home/
  • Cine News/
  • தீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடிய சூப்பர் ஸ்டார்....

தீபாவளியை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடிய சூப்பர் ஸ்டார்....


தீபாவளி திருநாளை மிகவும் கொண்டாட்டமாக உற்சாகமாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ரஜினிகாந்த். 

மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தீபாவளி தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். 

இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும், ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

’இதேபோல் தலைவர் அவர்கள் நீண்ட வருடத்திற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்...

share