Kollywood News

  • Home/
  • Cine News/
  • இன்று அமெரிக்கா செல்லும் ரஜினி

இன்று அமெரிக்கா செல்லும் ரஜினி

ஒருபக்கம் பட வேலைகள், மறுபக்கம் அரசியல் செயல்பாடுகள் என பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த பரபரப்புக்குகிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அவர் அமெரிக்காவில் கொண்டாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவர் நடித்த பேட்ட திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

ஜனவரி 10-ம் தேதிக்கு பின் சென்னை திரும்பியதும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.

Read More about :

share