Kollywood News

  • Home/
  • Cine News/
  • அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்:

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி் வரும் ''தர்பார்'' திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று தேர்தலை முன்னிட்டு தனது வாக்கை பதிவு செய்ய மும்பையில் இருந்து சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் மும்பை செல்லவிருப்பதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டார் அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த், 'தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது, அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் கூறினார். மேலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இந்த  கேள்விக்கு மே 23ஆம் தேதி பதில் தெரிந்து விடும் என்று கூறினார்.
 

share