Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜி எஸ் டி-க்கு எதிராக குரல்.. ரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்!

ஜி எஸ் டி-க்கு எதிராக குரல்.. ரஜினிக்கு நன்றி தெரிவித்த கமல்!



தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஜி எஸ் டிக்கு எதிராக பெரிய பிரளயமே நடந்து வருகிறது. சினிமாவிற்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியால் கடந்த மூன்று தினங்களாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தும் நடிகர் சங்கத்தின் சார்பாகவும் தொடர்ந்து தமிழக அரசிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தனது ஜிஎஸ்டி வரிக்கு எதிராக தனது குரலை பதிவு செய்தார். 

இந்த ட்விட்டுக்கு பதில் அளித்த நடிகர் கமல், ‘இதற்கு நான் முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் ஒரு ஜென்டில்மேனாக கோரிக்கையை வைப்போம், பிறகு பார்த்துக் கொள்வோம்.’ என்று கூறியுள்ளார்.

share