Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிகாந்த் இன்று ஆஜராக வேண்டும்: மதுரை கோர்ட்டு நோட்டீசு!!

ரஜினிகாந்த் இன்று ஆஜராக வேண்டும்: மதுரை கோர்ட்டு நோட்டீசு!!


மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த வழக்கில் தனது கதையை திருடி தான் லிங்கா படத்தினை எடுத்திருக்கிறார்கள். அதற்காக அந்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


இது குறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது,”தனது ”முல்லை வானம் 999” என்ற படத்தின் கதையை திருடி, லிங்கா படத்தினை தயாரித்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்த வழக்கை விரைந்து முடிக்க லிங்கா பட நிறுவனம் சார்பாக மதுரை கோர்ட்டில் ஒரு மனு வழங்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் மாதத்திற்குள் விசாரனையை முடிக்க கெடு விதித்தது. அதன் பேரில் இன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று நடக்கும் விசாரணையில் மனுதாரர் எதிர்தரப்பு வக்கீல்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

share