Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்

விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்

           தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தர். மூன்று மாதங்கள் சிகிச்சை எடுத்த பின்னர் தமிழகம் திரும்பினார் விஜயகாந்த். தமிழகம் திரும்பிய அவரை சினிமா பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் அவர்கள் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். பிரேமலதா விஜயகாந்த், ஷண்முக பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் ஏதும் இருக்குமா என்று அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Read More about :

share