Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் அடுத்த திட்டம்: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் சுற்றுப்பயணம்!

ரஜினியின் அடுத்த திட்டம்: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் சுற்றுப்பயணம்!




நடிகர் ரஜினி தனது இயக்கத்தை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில்  அவரது நணபரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் சந்தித்தார், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.


ஆலோசனை முடிவில் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமிப்பது அதன் பின்னர் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

share