Kollywood News

  • Home/
  • Cine News/
  • அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவித்த முக்கிய அறிவிப்பு!

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவித்த முக்கிய அறிவிப்பு!




நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து வருகிறார். தமிழக மக்கள் அரசியலுக்கு இவர் வர வேண்டுமென்று ஆசைப்படுவதில் ரஜினி முதலிடம் என்றால் அது மிகையாகாது. 

இந்நிலையில் அவர் அண்மையில் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அவர் அறிவிக்கவில்லை. இன்று நடக்கும் இந்த ரசிகர் சந்திப்பு கூட்டத்தில் அவர் இது குறித்து அறிவிப்பார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து அவர் இன்று நடந்த சந்திப்பு கூட்டத்தில் பேசுகையில், "நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை.

வரும் 31ம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மட்டுமே தெரியப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

share