Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த்-ம் ஆதரவு

விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த்-ம் ஆதரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்திற்கு அதிமுகவினர்களின் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஒருசில திரையரங்குகளில் சர்கார்' காட்சிகள் ரத்து செய்யும் அளவுக்கு போராட்டம் வலுத்து வருவதால் படக்குழுவினர்கல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். 

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் - தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read More about :

share