Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’பொது அறிவுக்கு ரஜினிகாந்த் மட்டுமே’ - பிரபல இயக்குநர்..

’பொது அறிவுக்கு ரஜினிகாந்த் மட்டுமே’ - பிரபல இயக்குநர்..


40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் இயக்குநர் மனோ பாலா. தற்போது அரவிந்த சாமி நடிப்பில் உருவாகி வரும் ‘சதுரங்க வேட்டை-2’ படத்தினை தயாரித்து வருகிறார். 

நேற்று தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர், ரஜினியை பற்றி கூறும் போது, ‘ பொது அறிவினை பற்றிய பல விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பார். அனைத்து செய்தியும் அவருக்கு தெரிந்தாலும் கூட நாம் என்ன பேசுகிறோம் என்பதை கூர்ந்து கவனிப்பார். 

எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த ஆர்வமாக இருப்பார் ரஜினி. எனக்கும் அவருக்கும் பல வருட நட்பு இன்னமும் தொடர்கிறது.’ என்றார்.

share