ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்?ராஜமாதா சிவகாமியாக ‘பாகுபலி’ படத்தில் நடித்ததில் இருந்து, ரம்யா கிருஷ்ணனுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், ஜெ.வாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்றொரு தகவல் பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நானும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன். 

ஆனால், யாரும் இதுகுறித்து என்னிடம் பேசவில்லை. ஜெயலலிதா, மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர். தைரியமான பெண்மணி. அவருடைய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால், நிச்சயம் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பதில் ஸ்ரீதேவி நடித்தால் சிறப்பாக இருந்திருக்கும் என இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

share