Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாராவுக்கு ஆதரவாக ராதாரவியை விமர்சித்து பதிவிட்ட ராணா டகுபதி:

நயன்தாராவுக்கு ஆதரவாக ராதாரவியை விமர்சித்து பதிவிட்ட ராணா டகுபதி:

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நயன்தாராவை பற்றி நடிகர் ராதா ரவி அவதூறாக பேசினார். ராதா ரவியின் இந்த கருத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்பட அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினும் ராதா ரவியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். மேலும் நயன்தாரா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் நேற்று வெளியானது.

இந்நிலையில் ராதா ரவியின் கருத்திற்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ராணா டகுபதி டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ஒரு மிகச்சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள் என குறிப்பிட்டார்.

share