Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஞ்சித்தை ஒதுக்கி வைத்த சூர்யா.. காரணம் ஏன்..??

ரஞ்சித்தை ஒதுக்கி வைத்த சூர்யா.. காரணம் ஏன்..??



ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது “கபாலி”. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் பல வந்தாலும் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து  இயக்குனர் ரஞ்சித் சூர்யாவை வைத்து இயக்கபோவதாக தகவல் வெளியானது. இந்த கதையில் சூர்யா ஒரு பாக்ஸராக தோன்றுகிறார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவலின் படி, சூர்யா அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் ரஞ்சித் படத்தினை சூர்யா ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கபாலியின் கலவையான விமர்சனம் தான் இயக்குனர் ரஞ்சித்தை சூர்யா ஒதுக்கி வைத்ததற்கான காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

share