Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால் நடிப்பீர்களா?

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால் நடிப்பீர்களா?

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம்மோகினி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் த்ரிஷா கலந்துகொண்டார். அப்போதுஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுத்தால் நடிப்பீர்களாஎன்ற கேள்விக்கு

சென்னையில் ஜெயலலிதா படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன். என்னுடைய 10-வது வயதில், என் பள்ளி விழாவுக்கு அவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததிலிருந்தே, அவர் மீது பாசம், மரியாதை. அவர் கையால் வாங்கிய சினிமா விருது புகைப்படத்தைத் தான் இப்போதும் என் சமூக வலைத்தள தில் முகப்புப் படமாக வைத்திருக்கிறேன்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைச் சினிமா படமாக எடுத்தால், அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், எனக்கு அரசியல் ஆர்வமெல்லாம் கிடையாது. நடிகையாகவே சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

Read More about :

share