Kollywood News

  • Home/
  • Cine News/
  • லட்சுமி மேனனை கடத்துகிறார் விஜய் சேதுபதி..?? - ’றெக்க’ கதை

லட்சுமி மேனனை கடத்துகிறார் விஜய் சேதுபதி..?? - ’றெக்க’ கதை


விஜய் சேதுபதி மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘றெக்க’. இந்த படத்தினை காமன்மேன் நிறுவன சார்பில் விஜய் சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரித்திருக்கிறார். இமானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

ரத்தின சிவா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தினை பற்றி பேசிய இயக்குனர் ரத்தின சிவா, 'வேலை இல்லாமல் ஊரை சுற்றித் திரியும் கும்பகோணத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. தனது தங்கையின் திருமணத்திற்கு பணம் சேர்க்க ஒருவரின் பேச்சைக் கேட்டு மதுரையில் உள்ள லட்சுமி மேனனை கடத்துகிறார் விஜய் சேதுபதி.

பின் லட்சுமி மேனனை காதலிக்கிறார். லட்சுமி மேனன் அவரது காதலை ஏற்றுக் கொண்டாரா..?? தனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தாரா ?? என்பதே படத்தின் மீதிக் கதை.’ என்றார்.

வரும் ஆயுத பூஜையில் படத்தினை திரைக்க கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்..

share