Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”சிவகார்த்திகேயனை நான் கொண்டாடாமல் வேறு யாரு......??” - விஜய் சேதுபதி..!!

”சிவகார்த்திகேயனை நான் கொண்டாடாமல் வேறு யாரு......??” - விஜய் சேதுபதி..!!



விஜய் சேதுபதி நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. விஜய் சேதுபதியின் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை கணேஷ் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தின் பாடல் ஒன்றில் மான்கராத்தே சிவகார்த்திகேயன் ஸ்டைல் ஒன்றை உபயோகப்படுத்தியிருப்பார்.

இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘ தமிழ் சினிமாவில் தான் நானும் சிவகார்த்திகேயனும் இருக்கிறோம். நான் ஒரு நாளும் அவரை எதிரியாக பார்த்ததில்லை. அவரும் என்னை அப்படி பார்த்ததில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித்தை அனைவரும் கொண்டாடி விட்டார்கள். என்னுடன் பயணித்து வரும் சிவகார்த்திகேயனை நான் தான் கொண்டாட வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு நடிகரை நான் ஏன் கொண்டாட வேண்டும். என்னுடைய தமிழ் சினிமாவில் வாழும் ஒரு கலைஞனை நான் ஏன் கொண்டாட கூடாது. அந்த காட்சியை நான் தான் வைக்க சொன்னேன். இதில் எனக்கு பெருமை தான் இருக்கிறது.” என்று கூறினார்.

share