Kollywood News

  • Home/
  • Cine News/
  • விரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

விரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. 2015-18ம் ஆண்டுக்கான தேர்தலில் நாசர், விஷால், பொன்வண்ணன் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் நிறைவடைந்தது. 

இதையடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால், நடிகர் சங்க கட்டட பணிகளை காரணம் காட்டி, தேர்தலை 6 மாதம் தள்ளிவைத்தனர். தற்போது அதுவும் முடிந்த நிலையில் கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் தேர்தல் நடக்கும் என நாசர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு தனியார் ஓட்டலில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட தேர்தல், கட்டட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாசர், "கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அவர் அறிவிப்பார்.

Read More about :

share