Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' கூட்டணி

மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' கூட்டணி

அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்த அஜித்-விவேக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் 'விசுவாசம்' படத்தில் இணையவுள்ளது

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'வீரம்', 'என்னை அறிந்தால்' உள்பட பல அஜித் படங்களில் விவேக் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் கதையுடன் ஒன்றி வருவதாகவும், இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இணைவது குறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.

அஜித், நயன் தாரா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Source : Indiaglitz

Read More about :

share