Kollywood News

  • Home/
  • Cine News/
  • Super Deluxe" படத்தின் ட்ரைலர் Review

Super Deluxe" படத்தின் ட்ரைலர் Review

            விஜய் சேதுபதி,ரம்யா கிருஷ்ணன்,பாஹத் பாசில்,மிஷ்கின்,சமந்தா என முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் தான் "Super Deluxe".இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்று உள்ளது."ஒரு நாள் ஒரு ஆள்" என விஜய் சேதுபதி சொல்லும் வசனத்தில் ஆரம்பமாகும் "Super Deluxe"ட்ரைலர் யதார்த்தக் காட்சிகளோடு இருக்க."விஜய் சேதுபதி,மிஷ்கின்,ரம்யா கிருஷ்ணன்,பாஹத் பாசில்,சமந்தா என அனைவரும் அற்புதமாக நடித்து இருப்பது ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது."ஆஹான்னு சொன்னா"என்ற வசனத்தோடு முடிகிறது "Super Deluxe" ட்ரைலர். இந்த ட்ரைலரில் அனைவரின் கடின உழைப்பும் தெரிகிறது. படத்தின் ட்ரைலர் வெளியான நொடியிலிருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கை பிடித்துள்ளது. 

             யுவன் ஷங்கர் ராஜாவின் இசையின் அற்புதம் ட்ரைலரில் பிரதிபலிக்கிறது. நொடிக்கு நொடி படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் சிறப்பு அனைவரின் தோற்றத்திற்கும் சிறப்பு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் தோற்றம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மிஷ்கின் தன் இயல்பான நடிப்பை கொட்டித்தீர்த்துள்ளார். பாஹத், சமந்தா இருவரும் பயந்தவர்கள் போல நடித்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. ரம்யாகிருஷ்ணனின் தோற்றமும் பார்வையும் புரியாத புதிராக உள்ளது. மேலும் இளம் வயது பையன்கள் 3 பேர் கதையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


                           படத்தின் கூடுதல் சிறப்பு திரைக்கதையை இயக்குனருடன் சேர்ந்து மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் ஒன்றாக ஏழுதி உள்ளனர். இயக்குனருக்கு பாராட்டுகளை அனைவரும் அள்ளித்தெளித்த வண்ணம் உள்ளனர். படம் மார்ச் 29ம் தேதி வெளிவரஉள்ளது ட்ரைலரை பார்த்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது தான் நிதர்சனமான உண்மை.   

Read More about :

share