Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆர்.கே.நகர் ரிலீஸ் தேதி அறிவித்த வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' :

ஆர்.கே.நகர் ரிலீஸ் தேதி அறிவித்த வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' :

ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 12 ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது.

ஏப்ரல் 12ஆம் தேதி 'ஆர்.கே.நகர்' தேர்தலை அறிவித்துள்ளதாகவும், ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று வாக்களிக்க தயாராக இருக்குமாறும் இந்தநிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவுள்ளது.

வைபவ், பிரேம்ஜி அமரன், கருணாகரன், சனா அல்தாப், இனிகோ, சம்பத்ராஜ், சந்தான பாரதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணா ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
 

share