Kollywood News

  • Home/
  • Cine News/
  • தாகூர் அனூப்புடன் மோதும் சூர்யா..!!

தாகூர் அனூப்புடன் மோதும் சூர்யா..!!



ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது ‘சிங்கம்’. இதன் வெற்றியால் சிங்கம்-2 யும் இயக்கினார் ஹரி. இந்த இரண்டாம் பாகமும் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலில் பட்டையை கிளப்பியது.

இதன் மூன்றாம் பாகத்தையும் ஹரி எடுக்க தவறவில்லை. ‘எஸ்-3’ என டைட்டில் வைத்து அதையும் தற்பொது இயக்கி வருகிறார். ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர்.

இதில் சூர்யாவிற்கு வில்லனாக ஹிந்தி நடிகர் தாகூர் அனூப் சிங் நடிக்கிறார். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இதில் வில்லன் அனூப் சிங்குடன் மோதும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியுன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது....

share