Kollywood News

  • Home/
  • Cine News/
  • இதற்காகத்தான் ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா நடிக்கவில்லையாம்...

இதற்காகத்தான் ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா நடிக்கவில்லையாம்...



விக்ரம், த்ரிஷா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் தான் ‘சாமி’. இப்படத்தினை ஹரி இயக்கியிருந்தார்.

தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. . முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவையே இரண்டாம் பாகத்தில் நடிக்க வைப்பதாக இருந்தது. 

இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்ஸ் வாங்கினார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார் நடிகை த்ரிஷா. இந்த விவகாரம் திரையுலகில் அதிருப்தியை உண்டாக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘சாமி 2’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிகை த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. தற்போது தனது விளக்கத்தை த்ரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் த்ரிஷா கூறியுள்ளதாவது, "படத்தில் நான் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். எனது சொந்தக் காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

share