’சாமி 2’க்காக மீண்டும் டிஎஸ்பி’யோடு இணைந்த ஹரி!


ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சாமி 2’. 2003ஆம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் தயாராகிறது. த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக, தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஹரி கடைசியாக இயக்கிய ‘சிங்கம் 3’ படத்துக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும், ‘சாமி’ படத்துக்கு இசையமைத்தவரும் அவர்தான். ஆனால், அவரை விட்டுவிட்டு டி.எஸ்.பி.யை ஒப்பந்தம் செய்துள்ளார் ஹரி. அதேசமயம், ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ உள்ளிட்ட பல படங்களில் ஹரியுடன் பணியாற்றியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.

share