Kollywood News

  • Home/
  • Cine News/
  • சசிகலா கேரக்டராக ரிஸ்க் எடுக்கும் சாய்பல்லவி

சசிகலா கேரக்டராக ரிஸ்க் எடுக்கும் சாய்பல்லவி

இன்னும் மலர் டீச்சராகவே நடிகை சாய்பல்லவியை பலர் நினைத்து வருகின்றனர். அந்த கேரக்டர் மீ தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த முதல் தமிழ்ப்படமான ஏ.எல்.விஜய் இயக்கிய 'கரு' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இதை தொடர்ந்து மாரி 2 படத்தில் சாய்பல்லவி நடித்த அராத்து ஆனந்தி கேரக்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்பல்லவி, சசிகலா வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் சசிகலா கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பதை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லைதமிழ் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று வரும் நிலையில் இயக்குனர் விஜய்க்காகவே சசிகலா கேரக்டரில் சாய்பல்லவி ரிஸ்க் எடுத்து நடிப்பதாக கூறப்படுகிறது.

Read More about :

share