Kollywood News

  • Home/
  • Cine News/
  • சர்கார் இசை வெளியீடு தகவல்

சர்கார் இசை வெளியீடு தகவல்

தளபதி விஜயின் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக விரைவில் வெளியிடம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான 'மெர்சல்' படத்தில் பாடல்கள் அனைத்தும் மெர்சலான நிலையில் 'சர்கார்' படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Read More about :

share