Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜய் 'சர்க்கார்' சென்சார் தகவல்கள்

தளபதி விஜய் 'சர்க்கார்' சென்சார் தகவல்கள்

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்க்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'சர்க்கார்' படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் நவம்பர் 06ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு , ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு  க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 

share