Kollywood News

  • Home/
  • Cine News/
  • முதலமைச்சராகிறாரா விஜய் ?

முதலமைச்சராகிறாரா விஜய் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம்தான்  ‘சர்கார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இப்படத்தை சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் மாறன், மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், படத்தின்  பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தில் நடிகர் விஜய் அமெரிக்கத் தொழிலதிபராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது படத்தின் கதைப் பற்றிய மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

சர்கார் படத்தில் தொழிலதிபராக இருக்கும் விஜய், ஒரு சில காரணத்திற்காக இந்தியாவிற்கு வருகிறார். அவருக்கு ஒரு கட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறது. அதைப் பெற முயற்சிக்கும் போது, அவருக்கான உரிமைகளை சில மேல் அதிகாரிகள்   பறிக்கின்றனர். இதற்குப் பழி வாங்கும் வகையில், தளபதி  விஜய் அவர்களுக்கே தலைவனாக, அதாவது முதல்வராக மாறுவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, இந்தப்படம்  குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தகவல் மேலும் எப்போது படம் வெளிவரும் என ஆர்வத்தை அதிகரிக்கவைக்கிறது.

Read More about :

share