Kollywood News

  • Home/
  • Cine News/
  • சத்யராஜின் அடுத்த படம்

சத்யராஜின் அடுத்த படம்

நோடா திரைப்படத்தில் கடைசியாக முக்கிய வேடத்தில் நடித்த சத்யராஜ் தற்பொழுது முழுவதுமாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் பெயர் "தீர்ப்புகள் விற்கப்படும்" புதுமுக இயக்குனர் தீரன் இந்த படத்தை இயக்குகிறார் இதற்குமுன் சில விளம்பர படங்கள் எடுத்ததாக கூறியுள்ளார். ஹனி பீ கலெக்ஷன்ஸ்  நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 


 "தீர்ப்புகள் விற்கப்படும்" உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கதையோடு நிகழ்கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை படம் சொல்லும். இந்த படத்தில் சத்யராஜ் அவர்கள் தன்னுடைய வயதுக்கு நிகரான கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு நீதி துறையை விமர்சிப்பதுபோல இருக்கிறது தலைப்பை மாற்றுங்கள் என்று பலர் கூறினார் அனால் கதைக்கு இந்த தலைப்பு தான் சீராக அமையும் என்பதால் நான் தலைப்பை மாற்றவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அஞ்சி, இசை பிரசாத் S.N, படத்தொகுப்பு ஷரத் கையாளுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Read More about :

share