’சாவித்திரி’யில் இணைந்த மேலும் ஒரு நடிகை!நடிகைகளில் நடிகையர் திலகமாக வாழ்ந்தவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கவிருக்கிறார் நாக் அஸ்வின். 1940 முதல் 1980 வரையிலான சாவித்ரியின் வாழ்க்கையே இந்தப் படத்தில் சொல்லப்பட இருக்கிறது. 

அதாவது, ஜெமினி கணேசனுடன் அவர் இருந்த காலகட்டம். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பத்திரிகையாளராக சமந்தா நடிக்கிறார். 

மே இரண்டாவது வாரத்தில் இருந்து ஷூட்டிங் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க அனுஷ்கா மற்றும் பிரகாஷ் ராஜிடம் கேட்டுள்ளனர். அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், மிகப்பெரிய ஸ்டார் காஸ்ட் உள்ள படமாக இது மாறும்.

share