Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் தர்பார் இரண்டாவது போஸ்டர் எப்படி இருக்கும்- வெளியான சூப்பர் தகவல்

ரஜினியின் தர்பார் இரண்டாவது போஸ்டர் எப்படி இருக்கும்- வெளியான சூப்பர் தகவல்

ஏ.ஆர். முருகதாஸ்-ரஜினி முதன் முதலாக இணைந்துள்ள படம் தர்பார். ஏப்ரல் 10 அதாவது நேற்று படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.

இப்பட ஃபஸ்ட் லுக்கும் அதற்கு முன் நாளே வெளியானது. ரஜினியின் மாஸ் லுக், போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் போஸ்டரில் இடம்பெற ரசிகர்கள் செம மாஸாக படம் இருக்கப்போகிறது என்ற படு குஷியில் உள்ளனர்.

முதல் போஸ்டரே இப்படி என்றால் இரண்டாவது லுக் எப்படி இருக்கும். அது குறித்து இப்பட டிசைனர் வின்சி ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், ஃபஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி, இது முழுக்க முழுக்க என் கற்பனையில் தயாரானது. ரஜினி போலீஸ் என்பதால் அந்த விஷயங்களை போஸ்டரில் வைத்தேன், மற்றபடி குறியீடு எல்லாம் இல்லை.

இதைவிட இரண்டாவது போஸ்டர் டிசைன் இன்னும் செம மாஸாக இருக்கும், அந்த வேலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Read More about :

share