Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’சீமராஜா’வாக களம் காணும் சிவகார்த்திகேயன்!

’சீமராஜா’வாக களம் காணும் சிவகார்த்திகேயன்!



சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இக்கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணைந்துள்ளது. 

வெகு நாட்களாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இப்படத்திற்கு, நேற்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சீமராஜா’ என்கிற தலைப்பு பர்ஸ்ட்லுக்குடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 12வது படமாகும்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார்.

share