Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

கோலிவுட் திரையுலகில் தயாராகும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் ஆகியவை சமூக வலைத்தளங்களில்தான் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. ஆனால் தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வித்தியாசமாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. அதேபோல் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் வெளியானது. இந்த நிலையில் இதே பாணியில் விஜய்சேதுபதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

ஆம், விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இடையே திரையிடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, பார்வதி, அர்ச்சனா, காயத்ரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Source : Indiaglitz

Read More about :

share