Kollywood News

  • Home/
  • Cine News/
  • சின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடித்துள்ள ‘கரிமுகன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ்

சின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடித்துள்ள ‘கரிமுகன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ்

செல்லத் தங்கையா இயக்கத்தில் செந்தில் கணேஷ் நடிப்பில் இவருக்கு  ஜோடியாக, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் நடித்துள்ளார். 

எலக்ட்ரீஷியனாக செந்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கேரக்டர் பெயரும் செந்தில் தான். 

‘முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, முகம் தெரிந்த இரண்டு பேருக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது? அதில் இருந்து எப்படி அவர்கள் வெளியே வந்தார்கள்?’ என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தக் கதையை கமர்ஷியல் காமெடியாகச் சொல்லியிருக்கின்றனர்.

இந்தப் படம், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) ரிலீஸாக இருக்கிறது.

Read More about :

share