Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிப் 19 - திரையங்குகளில் மோதப்போகும் போலீஸ்காரர்கள்!!

பிப் 19 - திரையங்குகளில் மோதப்போகும் போலீஸ்காரர்கள்!!

வரும் வெள்ளி அன்று திரைக்கு இரண்டு பெரிய நாயகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் சேதுபதி மற்றும் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன்.

நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு இப்படம் வெளிவருவதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தனி ஒருவன் படத்திற்குப் பிறகு தனக்கென்ற ஒரு வெற்றிப்பாதையை உருவாக்கிக் கொண்ட ஜெயம் ரவி, மிருதன் படத்தையும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் நம்மை தள்ள வைத்திருக்கிறார்.

மேலும், இந்த இரு படத்திலும் இரு நாயகர்களும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயம் ரவி ட்ராஃபிக் போலீஸாகவும், விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாகவும் வருகிறார்கள்.


நிச்சயமாக இரு படங்களும் வெற்றியின் படிக்கட்டை பதம் பார்க்கும்....

share