Kollywood News

  • Home/
  • Cine News/
  • சேதுபதியின் வெற்றி வரிசையில் அடுத்ததாக ”காதலும் கடந்து போகும்”!!

சேதுபதியின் வெற்றி வரிசையில் அடுத்ததாக ”காதலும் கடந்து போகும்”!!

நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றி பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் அடுத்ததாக சில நாட்களுக்கு முன் வெளியான “சேதுபதி” மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 

போலீஸ் அதிகாரியாக நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரம்யா நம்பீசன். இன்னும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளை பதம் பார்த்து வருகிறது “சேதுபதி”.

படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ”காதலும் கடந்து போகும்” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பிரேமம் நாயகி மடோனா ஜோடியாக நடித்துள்ளார். சூது கவ்வும் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மார்ச் மாதம் 11 ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்...

share