Kollywood News

  • Home/
  • Cine News/
  • இப்படத்திற்கு இசையமைக்க, 2017ம்ஆண்டிலேயே தன்னை ஷங்கர் கேட்டுக்கொண்ட

இப்படத்திற்கு இசையமைக்க, 2017ம்ஆண்டிலேயே தன்னை ஷங்கர் கேட்டுக்கொண்ட

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

 

இந்நிலையில், 22 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும்கமல் - ஷங்கர் இணைந்துள்ளனர்.இந்த படத்திலும் இந்தியன் தாத்தா கமலின் வேடமே பிரதானமாகியிருக்கிறது. கமலுடன் காஜல்அகர்வால், சித்தார்த், நெடுமுடிவேணு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

 

இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தநிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.அதோடு, இப்படத்திற்கு இசையமைக்க, 2017ம்ஆண்டிலேயே தன்னை ஷங்கர் கேட்டுக்கொண்டதாகவும், அதனால் அப்போதில் இருந்தே அவர் சொன்ன பாடலின் சூழலுக்கு தான் பல டியூன்களை தயார் செய்ய தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார் அனிருத்.

பேட்ட படத்தில் ரஜினிக்கு இசை அமைத்த அனிருத் தற்பொழுது கமலுக்கும் இசை அமைத்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது .

Read More about :

share